Friday, 10 June 2011

இப் ப்ரபந்தத்தில் பேசப்படும் வ்ருத்தாந்தங்கள்

 
1.ப்ரம்ம ச்ருஷ்டி செய்தவன்
2.லங்காபுரியை அழித்தவன்
3.வாமன, த்ரிவிக்கம அவதாரம் எடுத்தவன்
4.கஜேந்த்ரனுக்கு அருள்புரிந்தவன்
5.மஹான்களாலே வணங்கப்படுபவன்
6.ருத்ரனால் அறியப்படாதவன்
7.வராஹாவதாரம் செய்தவன்
8.பாற்கடலில் யோகு செய்பவன்
9.வர்ணாச்ரம தர்மத்துக்கு நிர்வாஹகன்
10.நப்பின்னைப் பிராட்டியை மணந்தவன்
11.பாஹ்ய மதஸ்தர்களால் அறியப்படாதவன்
12.பஞ்ச பூதங்களுக்கும் ப்ரவர்த்தகன்
13.திருமார்பில் பிராட்டியை கொண்டவன்
14.எங்கும் வ்யாபித்து, ஸர்வ நிர்வாஹகனானவன்

121

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

விலக்ஷணமாய் பெருமை பொருந்தியதிருநாபியிலுண்டான பெரிதான தாமரைப் பூவாகிற ஆஸனத்தின் மீது ஒருகால் பிரமனை படைத்தருளினாய்

வ்யாக்யானம்

எம்பெருமானே, உன்னைத்தவிர, மற்றெல்லா சேதன, அசேதனப் பொருள்களுக்கும் உற்பத்தி ஸ்தானமாக இருக்கும் பெருமை உன் திருநாபிக்கே சேரும். அத்திருநாபியின் பெரிய தாமரைப்பூவின் இதழிலேதான் ஒருமுறை ஸ்ருஷ்டி காலத்திலே,  அஜன் (மற்றவர்களைப்போலே ஸ்த்ரீ-புருஷ ஸம்யோகத்தாலே பிறக்காதவன்) என்னும் அயனை உன் நிர்ஹேதுக க்ருபையினாலே   தோற்று வித்து, ஜகத் ஸ்ருஷ்டிக்கடியாக ப்ரும்ம ஸ்ருஷ்டியை செய்தாய்.
 அதாவது, மூலப்ரக்ருதிக்கொண்டு, மஹான், அஹங்காரம், தந்மாத்ரைகள், பூதங்கள் என்று அண்ட ஸ்ருஷ்டியளவும் உள்ள ஸமஷ்டி ஸ்ருஷ்டியை தானே செய்து, பின்னை, வ்யஷ்டி ஸ்ருஷ்டியான தேவ, மனுஷ்ய, திர்யக், ஸ்தாவர சரீரங்களை ச்ருஷ்டி செய்ய சதுர்முகனை அதிஷ்டித்தாய். 
ஆழ்வார் இதை அனுஸந்திப்பதின் தாத்பர்யமாவது:
ஸ்வாமின், உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையின்றி, இவ்வுலகங்கள் உண்டாயிருக்கமாட்டாவே. என்னையும் என்னைப்போன்ற மற்ற சேதனரையும் பெருவதற்கு அநாதிகாலமாக நீ தானே பாடுபட்டு வருகிறாய். ஸ்ருஷ்டிக்கு முன் தேஹேந்த்ரியம் அற்றவர்களாக அவிபக்த தமஸ் என்னும் பெயருடன் உன்னோடு ஒன்றியிருந்த மூலப்ரக்ருதியோடு பிரித்துக்காணவொண்ணாதபடி கலந்திருந்தேனன்றோ நான்.   இப்படி எதுவுமே என் அதீனமில்லாதபோது என்னை உண்டாக்கின நீயே என்னுடைய ஸம்ஸார துக்கத்தை கழித்துத்தருமித்தனையல்லது என்னால் கழித்துக்கொள்ளப்போகாது.
 
நானோ அக்ஞன், அசக்தன்.  நீயோ ஸர்வசக்தன். இங்ஙனே இருந்த பின்பு, நானே என் கார்யம் செய்து தலைக்கட்டுகை என்னும் பொருளுண்டோ.
 ஆக, உன்னைத்தவிர்த்து எல்லாப்பொருள் களின் உத்பத்தி, ரக்ஷணம் முதலான அனைத்தையும் செய்பவனாய், பிரமன் முதலிய அனைவர்க்கும் தந்தையாய், ஸ்வாமியாய், அவர்களுக்கு வரும் ஆபத்துகளிலெல்லாம் கைகொடுப்பவனாய் இருக்கும் நீயே  என்னை ரக்ஷித்து உய்விக்கவேணும் என்று எம்பெருமான் திருவடிகளிலே விழுந்து, விண்ணப்பித்து,
 
இம் முதல் கூறே இந்த திருவெழுகூற்றி ருக்கை யென்னும் ப்ரபந்தத்தின் ஸாரம் என்று நமக்கு உபதேசிக்கிறார்.  

12321

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை
ஸ்ரீராமனாய் அவதரித்த ஒருகாலத்தில் சந்திர ஸூர்யர்கள், (அச்சத்தினால்) மேலே ஸஞ்சரிக்க வொண்ணாத்தும் நீர்க் கோட்டை, மலைக்கோட்டை வனக்கோட்டை என்கிற மூன்று துர்க்கங்களை யுடையதுமான லங்காபுரியை இரண்டு நுனியும் ஒப்பற்ற சார்ங்கவில்லில் ...........

வ்யாக்யானம்

தான் விளைத்த பயிறுக்கு, விளைத்தவனே களை எடுக்குமாப்போலே, நீ படைத்த உலகத்தை அழிக்கப்புகும் ராக்ஷஸர்களை அழிப்பவனும் நீயே.
மலையரண், நீரரண், காட்டரண் என்னும் மும்மதிளுடைய இலங்கைக்கு அரசனாயிருந்த ராவணன் என்னும் ராக்ஷஸனிடம் சந்த்ர ஸூர்யர்களும் அஞ்சி வாழ்ந்த காலத்திலே, ஒரு நாள் இரு நுணியும் வளைந்துள்ள உன் சார்ங்கத்திலே, தொடுக்கும்போது அம்பாயும் எதிரிகளை அடையும் போது நெருப்பை உமிழும் அம்புகளை ஏவி, உன்னுடன் பிராட்டி ஸம்ச்லேஷிக்க விரோதியாயிருந்தவர்களை (ப்ரம்ம ஸ்ருஷ்டி போலே ஸங்கல்பத்தாலே செய்கையன்றிக்கே)  நேரே வந்து அழித்தாய்.
 பிராட்டியோடே உன் கலவிக்கு விரோதிகளைப் போக்கினாற்போல, எனக்கும் உமக்கும் நடுவே உள்ள ஸம்ச்லேஷ விரோதியான என் ஸம்ஸார பந்தத்தையும், அதற்கு மூலமான என் கர்ம, வாஸனா ருசிகளையும் அழித்து என்னை உய்விக்க வேணும். 
(பெருமானுக்கு அடிமைப்பட்ட ஆத்ம வஸ்துவை நாம் அவனிடம் அணுகவொண்ணாமே வைத்திருக்கிறோமே, அது, பெருமானிடமிருந்து பிராட்டியைப் பிரித்த ராவணனுடைய  செயலோடு ஒக்கும் என்று நாம் அறிய வேணும்.)

1234321

ஒன்றிஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,
பொருந்தியதும் இரண்டுபற்களை யுடையதும் நெருப்பைக் கக்குகிற வாயையுடையதுமான அம்பினால் நீறாக்கினாய்
---------------------------------------------------------------------------------------------------------------
மூவடி நானிலம் வேண்டி, முப்புரி நூலொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமாணாகி,

ஒருகாலத்தில் யஜ்ஞோபவீதத்தோடு கூட க்ருஷ்ணாஜிநமும் விளங்கா நின்ற திருமார்பையுடைய ஒருப்ராஹ்மண ப்ரஹ்மசாரியாகி(மாவிலியிடம் சென்று) பூமியிலே மூன்றடி நிலத்தை யாசித்து.....

வ்யாக்யானம்

இந்த்ரன் அஸாரமான மண்ணை மட்டுமே இழந்தான். நான் உன்னையும் என்னையும் இழந்து நிற்கிறேனே
ப்ரயோஜனாந்தர பர்ர்களுக்கு உதவி செய்யும் நீ, உன்னையே ப்ரயோஜனமாகப் பற்றியிருக்கும் எனக்கு உதவலாகாதோ.
இந்த்ரனுக்கு ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தவன் எனக்கு சேஷத்வ ஸாம்ராஜ்யத்தை கொடுக்கலாகாதோ.
ஆசையில்லாதோர் தலைமீது திருவடி வைக்கும் நீ, ஆசையுள்ளோர் தலைமீது வைக்கலாகாதோ

123454321

ஒருமுறை யீரடி,மூவுலகளந்தானை,

 இரண்டு திருவடிகளாலே மூன்று லோகங்களை அளந்துகொண்டாய்.

-----------------------------------------------------------------------------------------------------

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை,

 ஒரு காலத்தில் எங்குமுள்ள ஜனங்களும் நடுங்கும்படியாக (மஹத்தான கோபவேசத்தை ஏறிட்டுக்கொண்டு) அழகிய சிறகையுடைய பெரிய திருவடியின்மீது ஏறிக்கொண்டு தொங்குகின்ற வாயையும் மூவிடங்களில் மதநீர்ப் பெருக்கையும் இரண்டு காதுகளையும் உடைய பரமவிலக்ஷணனான கஜேந்திராழ்வா னுடைய துக்கத்தை ........

வ்யாக்யானம்

விலங்குகளுக்கும் நேரே ஓடோடிவந்து காக்கும் நீ என்னை உபேக்ஷிக்கலாமோ
ஒரு முதலையின் வாயில் நின்றும் யானையை மீட்டவன், ஸம்ஸாரத்தின் வாயிலிருந்து என்னை மீட்டலாகாதோ.
ஆனைக்கு விரோதி முதலை ஒன்று.  எனக்கு விரோதி முதலைகள் ஐந்து.
அது பலமுள்ள யானை. நான் வலிவற்றவன்.  அது சிலகாலம் நோவு பட்டது.  னான் அனாதிகாலமாக நோவுபட்டுள்ளேன்.  அப்படி எனக்கும் ஓடிவர வேண்டாமோ.

12345654321

ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை.
ஆழமான நீரையுடைய மடுவின் (கரையிலே எழுந்தருளி) நீக்கியருளினாய்.

----------------------------------------------------------------------------------------------------------

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை, ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில்

மூவகை அக்நிகளையும் நால்வகை வேதங்களையும் ஐவகை யஜ்ஞங்களையும் ஆறுவகைக் கருமங்களையும் உடையரான ப்ராஹ்மணர்களால் வணங்கப்படுகின்றாய்
முத்தீ கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை
ஐவகைவேள்வி ப்ரஹ்மயஜ்ஞம் தேவயஜ்ஞம் பித்ருயஜ்ஞம் மநுஷ்யயஜ்ஞம் என்ற பஞ்சமஹாயஜ்ஞங்கள்
அறு தொழில்  வேதமோதுதல், பிறற்களுக்கு ஓதுவித்தல், யாகஞ் செய்தல், பிறர்க்கு யாகஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம்வாங்கிக்கொள்ளுதல்
 பஞ்சேந்திரியங்களையும்
உண்ணுதல்,   உறங்குதல், அஞ்சுதல், விஷய போகஞ்செய்தல் என்கிற நான்கையும் அடக்கி,
 ஸத்வம், ரஜஸ்தமஸ் என்கிற மூன்று  குணங்களில் ரஜஸ் தமஸ் இரண்டும் விலக்கி, ஸத்வகுண மொன்றிலேயே ................

வ்யாக்யானம்

உபாயாந்தரங்களில் முதலாயது, முத்தீ என்னும் கர்மயோகம். அக்கர்மத்தை நன்கு அனுஷ்டிப்பதற்கு, நான்மறை. தினம் செய்ய ஐவகை வேள்வி, அறுதொழில். இக்கர்மயோகத்தால், உன்னையே பெற விரும்பி உன்னை ஆச்ரயிக்கும் ப்ராம்மணத்களால் வணங்கப்படும் தன்மை உடையவன்

அடுத்தது பக்தியோகம். ஐந்து இந்த்ரியங்களையும் வாஸனைகளில் செல்லாமல் அடக்கி, போகங்களை விலக்கி, ரஜஸ், தமஸ் ஒழித்து, ஸத்வத்திலேயே பொருந்தி பிறப்பறுப்போர் செய்யும் கர்ம பக்தி யோகங்களாலே அறியப்படுபவனாக இருக்கிறாய்.  

1234567654321

ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,

பொருந்தியிருந்து மறுபிறவி நீக்கிக் கொள்ள வல்ல மகான்களாலே அறியத்தக்க ஸ்வபாவத்தை உடையைவனாய் நின்றாய்.
-------------------------------------------------------------------------------------------------
முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

மூன்று கண்களையும் நான்கு தோள்களையும் ஐந்து வாயையுமுடைய பாம்பையும், ஆறு, கங்கை கொண்ட சடையோனான ருத்ரனுக்கு அறியமுடியாத  ஸ்வபாவத்தை யுடையனாயிருக்கை யாகிற பெருமையிலே நின்றாய்.
வ்யாக்யானம்
 ஞானமும் சக்தியும் உடைய ருத்ரனாலேயும் அறியப்படாதவனான உன்னை நான் அறிய சக்தனோ. உன் நிர்ஹேதுக க்ருபை கொண்டு எனக்கு அருளவேணும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
ஏழுல கெயிற்றினில் கொண்டனை,

ஏழு தீவுகளையுடைய பூமண்டலத்தை, ஸ்ரீவராஹமாகிக் கோட்டில் எடுத்துக்கொண்டாய்

வ்யாக்யானம்

ப்ரளயாபத்து வந்தபோது, வராஹமாகி நீ யல்லவோ இவ்வுலகத்தை எயிற்று காத்தாய். ப்ரம்ம ருத்ராதிகள் செய்யவில்லையே.
அப்படியே என்னையும் எடுத்தருள வேணும்.

--------------------------------------------------------------------------------------------------------
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை,

அறுசுவையடிசிலென்கோ என்றபடி ஆறுவகை ரஸங்களாகி பரமபோக்யனாகி நின்றாய்.

வ்யாக்யானம்
அடிசில் போல் அவர்கள் விரும்பும் பயனை அளித்தாய். அப்படியே எனக்கம் அருளவேணும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,

அழகிய திருக்கையில் ஒளிவிடும் பஞ்சாயுதங்களும் பொருந்தப்பெற்று அழகிய நான்கு திருத் தோள்களை யுடையனாய் கடல் போன்ற வுடிவையுமுடைனான ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் மூவகை நீரையும் உடையதான  கடல்வண்ணனே, உனது உபய பாதங்களை ஆழ்ந்த அன்புடன் ..............

வ்யாக்யானம்

முந்நீர் உடைத்த கடல்போல் கண்டார் களைப்பை ஆற்றும் வடிவழகை உடையோனே,  இவ்வடிவழகை முற்றுமாய் நான் அனுபவிக்கும்படி அனுக்ரஹிக்க வேணும்.
 -----------------------------------------------------------------------------------

நின் ஈரடி ஒன்றிய மனத்தால் .......
உன் இரு திருவடிகளில் ஒருமைப்பட்டிருக்கும் நெஞ்சை உடையவர்களாய் அன்ன்ய போக்யத்துடன் .............................