ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை
•ஸ்ரீராமனாய் அவதரித்த ஒருகாலத்தில் சந்திர ஸூர்யர்கள், (அச்சத்தினால்) மேலே ஸஞ்சரிக்க வொண்ணாத்தும் நீர்க் கோட்டை, மலைக்கோட்டை வனக்கோட்டை என்கிற மூன்று துர்க்கங்களை யுடையதுமான லங்காபுரியை இரண்டு நுனியும் ஒப்பற்ற சார்ங்கவில்லில் ...........
வ்யாக்யானம்
•தான் விளைத்த பயிறுக்கு, விளைத்தவனே களை எடுக்குமாப்போலே, நீ படைத்த உலகத்தை அழிக்கப்புகும் ராக்ஷஸர்களை அழிப்பவனும் நீயே.
•மலையரண், நீரரண், காட்டரண் என்னும் மும்மதிளுடைய இலங்கைக்கு அரசனாயிருந்த ராவணன் என்னும் ராக்ஷஸனிடம் சந்த்ர ஸூர்யர்களும் அஞ்சி வாழ்ந்த காலத்திலே, ஒரு நாள் இரு நுணியும் வளைந்துள்ள உன் சார்ங்கத்திலே, தொடுக்கும்போது அம்பாயும் எதிரிகளை அடையும் போது நெருப்பை உமிழும் அம்புகளை ஏவி, உன்னுடன் பிராட்டி ஸம்ச்லேஷிக்க விரோதியாயிருந்தவர்களை (ப்ரம்ம ஸ்ருஷ்டி போலே ஸங்கல்பத்தாலே செய்கையன்றிக்கே) நேரே வந்து அழித்தாய்.
•பிராட்டியோடே உன் கலவிக்கு விரோதிகளைப் போக்கினாற்போல, எனக்கும் உமக்கும் நடுவே உள்ள ஸம்ச்லேஷ விரோதியான என் ஸம்ஸார பந்தத்தையும், அதற்கு மூலமான என் கர்ம, வாஸனா ருசிகளையும் அழித்து என்னை உய்விக்க வேணும்.
•(பெருமானுக்கு அடிமைப்பட்ட ஆத்ம வஸ்துவை நாம் அவனிடம் அணுகவொண்ணாமே வைத்திருக்கிறோமே, அது, பெருமானிடமிருந்து பிராட்டியைப் பிரித்த ராவணனுடைய செயலோடு ஒக்கும் என்று நாம் அறிய வேணும்.)
No comments:
Post a Comment