Friday, 10 June 2011

121

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

விலக்ஷணமாய் பெருமை பொருந்தியதிருநாபியிலுண்டான பெரிதான தாமரைப் பூவாகிற ஆஸனத்தின் மீது ஒருகால் பிரமனை படைத்தருளினாய்

வ்யாக்யானம்

எம்பெருமானே, உன்னைத்தவிர, மற்றெல்லா சேதன, அசேதனப் பொருள்களுக்கும் உற்பத்தி ஸ்தானமாக இருக்கும் பெருமை உன் திருநாபிக்கே சேரும். அத்திருநாபியின் பெரிய தாமரைப்பூவின் இதழிலேதான் ஒருமுறை ஸ்ருஷ்டி காலத்திலே,  அஜன் (மற்றவர்களைப்போலே ஸ்த்ரீ-புருஷ ஸம்யோகத்தாலே பிறக்காதவன்) என்னும் அயனை உன் நிர்ஹேதுக க்ருபையினாலே   தோற்று வித்து, ஜகத் ஸ்ருஷ்டிக்கடியாக ப்ரும்ம ஸ்ருஷ்டியை செய்தாய்.
 அதாவது, மூலப்ரக்ருதிக்கொண்டு, மஹான், அஹங்காரம், தந்மாத்ரைகள், பூதங்கள் என்று அண்ட ஸ்ருஷ்டியளவும் உள்ள ஸமஷ்டி ஸ்ருஷ்டியை தானே செய்து, பின்னை, வ்யஷ்டி ஸ்ருஷ்டியான தேவ, மனுஷ்ய, திர்யக், ஸ்தாவர சரீரங்களை ச்ருஷ்டி செய்ய சதுர்முகனை அதிஷ்டித்தாய். 
ஆழ்வார் இதை அனுஸந்திப்பதின் தாத்பர்யமாவது:
ஸ்வாமின், உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையின்றி, இவ்வுலகங்கள் உண்டாயிருக்கமாட்டாவே. என்னையும் என்னைப்போன்ற மற்ற சேதனரையும் பெருவதற்கு அநாதிகாலமாக நீ தானே பாடுபட்டு வருகிறாய். ஸ்ருஷ்டிக்கு முன் தேஹேந்த்ரியம் அற்றவர்களாக அவிபக்த தமஸ் என்னும் பெயருடன் உன்னோடு ஒன்றியிருந்த மூலப்ரக்ருதியோடு பிரித்துக்காணவொண்ணாதபடி கலந்திருந்தேனன்றோ நான்.   இப்படி எதுவுமே என் அதீனமில்லாதபோது என்னை உண்டாக்கின நீயே என்னுடைய ஸம்ஸார துக்கத்தை கழித்துத்தருமித்தனையல்லது என்னால் கழித்துக்கொள்ளப்போகாது.
 
நானோ அக்ஞன், அசக்தன்.  நீயோ ஸர்வசக்தன். இங்ஙனே இருந்த பின்பு, நானே என் கார்யம் செய்து தலைக்கட்டுகை என்னும் பொருளுண்டோ.
 ஆக, உன்னைத்தவிர்த்து எல்லாப்பொருள் களின் உத்பத்தி, ரக்ஷணம் முதலான அனைத்தையும் செய்பவனாய், பிரமன் முதலிய அனைவர்க்கும் தந்தையாய், ஸ்வாமியாய், அவர்களுக்கு வரும் ஆபத்துகளிலெல்லாம் கைகொடுப்பவனாய் இருக்கும் நீயே  என்னை ரக்ஷித்து உய்விக்கவேணும் என்று எம்பெருமான் திருவடிகளிலே விழுந்து, விண்ணப்பித்து,
 
இம் முதல் கூறே இந்த திருவெழுகூற்றி ருக்கை யென்னும் ப்ரபந்தத்தின் ஸாரம் என்று நமக்கு உபதேசிக்கிறார்.  

No comments:

Post a Comment