ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,
•மாசிலா திங்கள்போல் முகத்தரான திருமடந்தை மண்மடந்தை யிருவரும் மலர்போல் ஸுகுமாரமான (தங்களது) அழகிய கைகளாலே எப்போதும் பிடித்துக்கொண்டு, பக்தனாகவும் பித்தனாகவும் ஆக்கவல்ல உன் திருமுகத்தை கண்களாரப்பருக, அடியார்களை ரக்ஷிப்பது எப்படி என்று சிந்தித்துக்கொண்டே ஆநந்தமாக யோக நித்திரையில் எழுந்தருளி யிருக்கும் நீ என்னைப்பற்றி சிந்திக்காமல் இருப்பாயா.
----------------------------------------------------------------------------------------
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,
•- ब्राम्हणोस्य मुखमासीत् .... ऊरू तदस्य यद् वैश्यः என்றும் चातुर्वर्ण्यम् मया शृष्टम् என்றும் நான்கு வருணமும் நீயேயாகி நெறிமுறை தந்து நின்றாய். இப்படி நான்கு வர்ணத்தாராலும் நீ பூஜிக்கப் படுகிறாய்.
--------------------------------------------------------------------------------------------------------
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,
பஞ்ச மஹாபூதங்களுக்கும் ப்ரவர்த்தகனாகி நின்றாய்.
------------------------------------------------------------------------------------------------------------
அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை,
•ஆறு கால்களையுடைய வண்டுகள் மது பானத்திற்காக வந்து மொய்த்து ரீங்காரம் செய்யப்பெற்ற கூந்தலையுடைய நப்பின்னைப் பிராடிக்காக ஏழு ரிஷபங்களையும் வலியடக்கி அவளை அடைய, இருந்த தடையை நீக்கினாய். நான் உன்னை அடைய, இருக்கும் தடையையும் நீக்கவேணும்.
------------------------------------------------------------------------------------------------------------
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை,
•பாஹ்ய குத்ருஷ்டி மதஸ்தர்களாலே அறிந்துகொள்ளக்கூடாத நிலைமையை யுடையனாயிராநின்றாய். உன்னை அடையாதவர்க்கே அரியனாயிருக்கும் நீ, உன்னையே அடையவேணும் என்பவர்க்கும் அரியனாவதோ.
--------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை,
•மென்மை குளிர்த்தி நறுமணம் கருமை நெடுமை என்னும் ஐந்து லக்ஷணங்க ளமைந்த (ஓதி) கூந்தலையுடையளான பிராட்டியை திருமார்பிலே தரித்துக் கொண்டிருக்கிறாய்.
•இவ்வுலகத்தில் பாபம் செய்யாதோர் யாரும் இல்லை. ஆகவே, பாபம் செய்தவராயினும், அவர்களிடம் கருணைகாட்டவேண்டும் என்று அனுமனிடம் சொன்ன பிராட்டியை திருமார்பிலே தரித்துக் கொண்டிருப்பவன் என்னை திரஸ்கரிக்கலாமோ.
-----------------------------------------------------------------------------------------------------------
அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,
தருமம் முதலிய நான்கு புருஷார்த்தங் களையும் கொடுப்பவனாய் த்ரிமூர்த்தி ஸ்வரூபியாய், ஸுக துக்கங்களாகிய இருவகைப்பயனாய் இருந்தும் ஒருவனாய் பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து நின்றாய்
No comments:
Post a Comment