ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை.
•ஆழமான நீரையுடைய மடுவின் (கரையிலே எழுந்தருளி) நீக்கியருளினாய்.
----------------------------------------------------------------------------------------------------------
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை, ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில்
•மூவகை அக்நிகளையும் நால்வகை வேதங்களையும் ஐவகை யஜ்ஞங்களையும் ஆறுவகைக் கருமங்களையும் உடையரான ப்ராஹ்மணர்களால் வணங்கப்படுகின்றாய்
•முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை
•ஐவகைவேள்வி –ப்ரஹ்மயஜ்ஞம் தேவயஜ்ஞம் பித்ருயஜ்ஞம் மநுஷ்யயஜ்ஞம் என்ற பஞ்சமஹாயஜ்ஞங்கள்
•அறு தொழில் – வேதமோதுதல், பிறற்களுக்கு ஓதுவித்தல், யாகஞ் செய்தல், பிறர்க்கு யாகஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம்வாங்கிக்கொள்ளுதல்
•பஞ்சேந்திரியங்களையும்
•உண்ணுதல், உறங்குதல், அஞ்சுதல், விஷய போகஞ்செய்தல் என்கிற நான்கையும் அடக்கி,
ஸத்வம், ரஜஸ்தமஸ் என்கிற மூன்று குணங்களில் ரஜஸ் தமஸ் இரண்டும் விலக்கி, ஸத்வகுண மொன்றிலேயே ................
வ்யாக்யானம்
•உபாயாந்தரங்களில் முதலாயது, முத்தீ என்னும் கர்மயோகம். அக்கர்மத்தை நன்கு அனுஷ்டிப்பதற்கு, நான்மறை. தினம் செய்ய ஐவகை வேள்வி, அறுதொழில். இக்கர்மயோகத்தால், உன்னையே பெற விரும்பி உன்னை ஆச்ரயிக்கும் ப்ராம்மணத்களால் வணங்கப்படும் தன்மை உடையவன்
•அடுத்தது பக்தியோகம். ஐந்து இந்த்ரியங்களையும் வாஸனைகளில் செல்லாமல் அடக்கி, போகங்களை விலக்கி, ரஜஸ், தமஸ் ஒழித்து, ஸத்வத்திலேயே பொருந்தி பிறப்பறுப்போர் செய்யும் கர்ம பக்தி யோகங்களாலே அறியப்படுபவனாக இருக்கிறாய்.
No comments:
Post a Comment