இக்கூற்றின் நான்கு பாகங்கள்
1.எம்பெருமான் ஆச்ரிதர்களைக் காத்து அருள்வதற்காகச் செய்த செயல்கள், அவனுடைய ஸ்வரூப ஸ்வபாவங்கள், இவைகளை முதலில் பரக்கப் பேசி,
2.மேற்கூறிய திருக்குணங்களெல்லாம் செவ்வனே விளங்கத் திருக் குடந்தையில் கிடக்கிற கிடையிலே ஈடுபட்டு
3.அந்த க்ஷேத்ரத்தின் நீர்வளம் நிலவளம், வித்வத் ஸம்ருத்தி முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறி
4.சரணாகதி பண்ணுகிறார்.
முடிவுரை
•எம்பெருமானின் திருவடிகளை அடைய உபாயமாக அவனே இருப்பதால், ப்ரபன்னர்களாகிய நாம் அவனை அடைய, அவனையேதான் பற்றவேணும்
•அவன் நிர்ஹேதுக க்ருபையின்றி, நம் முயற்சியால் நாம் அவன் திருவடிகளை அடைய முடியாது.
•ஆக, நிர்ஹேதுக க்ருபையோடு கூடிய எம்பெருமான் ஒருவனே மோக்ஷோபாயம்.
•இக்கருத்தையே, திருமங்கை யாழ்வார் இத்திருவெழுகூற்றிருக்கையிலே தெளிவுபடுத்துகிறார்.
•ஒருபேருந்தி” என்று தொடங்கி, “அயனை ஈன்றனை, மீவுலகளந்தனை, அறிதுயில் அமர்ந்தனை, வருணமும் ஆயினை”, என்று அநனாதிகாலமாக பலவிதமாக க்ருஷி செய்துவரும் எம்பெருமான் பக்கலிலேயே उपाय भावम् பரிபூர்ணமாக இருப்பதையும், தன் கையில் ஏதுமில்லாதிருப்பதையும் சொல்லி, “மாற்றோ வினையே” என்று, தன் நிர்ஹேதுக க்ருபையாலே அவனே ஸம்ஸார பந்தத்தை அறுத்துத் தரவேணும் என்று ப்ரார்த்தித்து, “அடியிணை பணிவன்” என்று அவன் திருவடிகளை பற்றுகிறார்.
No comments:
Post a Comment