ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,
•பொருந்தியிருந்து மறுபிறவி நீக்கிக் கொள்ள வல்ல மகான்களாலே அறியத்தக்க ஸ்வபாவத்தை உடையைவனாய் நின்றாய்.
-------------------------------------------------------------------------------------------------
முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை, •மூன்று கண்களையும் நான்கு தோள்களையும் ஐந்து வாயையுமுடைய பாம்பையும், ஆறு, கங்கை கொண்ட சடையோனான ருத்ரனுக்கு அறியமுடியாத ஸ்வபாவத்தை யுடையனாயிருக்கை யாகிற பெருமையிலே நின்றாய்.
வ்யாக்யானம்
•ஞானமும் சக்தியும் உடைய ருத்ரனாலேயும் அறியப்படாதவனான உன்னை நான் அறிய சக்தனோ. உன் நிர்ஹேதுக க்ருபை கொண்டு எனக்கு அருளவேணும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
ஏழுல கெயிற்றினில் கொண்டனை,
ஏழு தீவுகளையுடைய பூமண்டலத்தை, ஸ்ரீவராஹமாகிக் கோட்டில் எடுத்துக்கொண்டாய்
வ்யாக்யானம்
•ப்ரளயாபத்து வந்தபோது, வராஹமாகி நீ யல்லவோ இவ்வுலகத்தை எயிற்று காத்தாய். ப்ரம்ம ருத்ராதிகள் செய்யவில்லையே.
--------------------------------------------------------------------------------------------------------
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, •அப்படியே என்னையும் எடுத்தருள வேணும்.
--------------------------------------------------------------------------------------------------------
அறுசுவையடிசிலென்கோ என்றபடி ஆறுவகை ரஸங்களாகி பரமபோக்யனாகி நின்றாய்.
வ்யாக்யானம்
•அடிசில் போல் அவர்கள் விரும்பும் பயனை அளித்தாய். அப்படியே எனக்கும் அருளவேணும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,
அழகிய திருக்கையில் ஒளிவிடும் பஞ்சாயுதங்களும் பொருந்தப்பெற்று அழகிய நான்கு திருத் தோள்களை யுடையனாய் கடல் போன்ற வுடிவையுமுடைனான ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் மூவகை நீரையும் உடையதான கடல்வண்ணனே, உனது உபய பாதங்களை ஆழ்ந்த அன்புடன் ..............
வ்யாக்யானம்
•முந்நீர் உடைத்த கடல்போல் கண்டார் களைப்பை ஆற்றும் வடிவழகை உடையோனே, இவ்வடிவழகை முற்றுமாய் நான் அனுபவிக்கும்படி அனுக்ரஹிக்க வேணும்.
-----------------------------------------------------------------------------------
•நின் ஈரடி ஒன்றிய மனத்தால் .......
•உன் இரு திருவடிகளில் ஒருமைப்பட்டிருக்கும் நெஞ்சை உடையவர்களாய் அன்ன்ய போக்யத்துடன் .............................
No comments:
Post a Comment