ஒருமுறை யீரடி,மூவுலகளந்தானை,
•இரண்டு திருவடிகளாலே மூன்று லோகங்களை அளந்துகொண்டாய்.
-----------------------------------------------------------------------------------------------------
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை,
•ஒரு காலத்தில் எங்குமுள்ள ஜனங்களும் நடுங்கும்படியாக (மஹத்தான கோபவேசத்தை ஏறிட்டுக்கொண்டு) அழகிய சிறகையுடைய பெரிய திருவடியின்மீது ஏறிக்கொண்டு தொங்குகின்ற வாயையும் மூவிடங்களில் மதநீர்ப் பெருக்கையும் இரண்டு காதுகளையும் உடைய பரமவிலக்ஷணனான கஜேந்திராழ்வா னுடைய துக்கத்தை ........
வ்யாக்யானம்
•விலங்குகளுக்கும் நேரே ஓடோடிவந்து காக்கும் நீ என்னை உபேக்ஷிக்கலாமோ
•ஒரு முதலையின் வாயில் நின்றும் யானையை மீட்டவன், ஸம்ஸாரத்தின் வாயிலிருந்து என்னை மீட்டலாகாதோ.
•ஆனைக்கு விரோதி முதலை ஒன்று. எனக்கு விரோதி முதலைகள் ஐந்து.
•அது பலமுள்ள யானை. நான் வலிவற்றவன். அது சிலகாலம் நோவு பட்டது. னான் அனாதிகாலமாக நோவுபட்டுள்ளேன். அப்படி எனக்கும் ஓடிவர வேண்டாமோ.
No comments:
Post a Comment